13-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்
𝟭𝟯•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟱 ராசி- பலன்கள்
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
பழைய நினைவுகளால் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதார சிக்கல் குறையும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மற்றும் தெளிவுகள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
⭐️பரணி : சிக்கல் குறையும்.
⭐️கிருத்திகை : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவும் அதற்கான செலவும் சிலருக்கு ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் மேம்படும். வீண் விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் புரிதல் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️மிருகசீரிஷம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் இருந்த கவலைகள் குறையும். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்கிறீர்கள். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : மதிப்புகள் ஏற்படும்.
⭐️பூசம் : மாற்றம் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் இருந்த பொறுப்புகள் குறையும். அரசு சார்ந்த செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த தொழிலில் லாபம் அடைவீர்கள். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️மகம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️உத்திரம் : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். நினைத்த பணிகள் சாதகமாக முடியும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : மாற்றம் பிறக்கும்.
⭐️அஸ்தம் : சாதகமான நாள்.
⭐️சித்திரை : ஏற்ற இறக்கமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வியாபார விஷயங்களில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
⭐️சித்திரை : விரயங்கள் ஏற்படும்.
⭐️சுவாதி : ஏற்ற இறக்கமான நாள்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பாடங்களில் இருந்த குழப்பங்கள் மறையும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️விசாகம் : உற்சாகமான நாள்.
⭐️அனுஷம் : குழப்பங்கள் மறையும்.
⭐️கேட்டை : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோகத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️மூலம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : ஆர்வமின்மை விலகும்.
⭐️உத்திராடம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மேல்நிலைக் கல்வி குறித்த எண்ணங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணி புரியும் இடத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.
⭐️உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.
⭐️திருவோணம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : மாற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
விவசாய பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில பணிகளை முடிப்பீர்கள். பாடங்களில் இருந்த தெளிவின்மை விலகும். ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️சதயம் : தெளிவின்மை விலகும்.
⭐️பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️பூரட்டாதி : முடிவுகள் பிறக்கும்.
⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : உற்சாகமான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
No comments:
Post a Comment