Saturday, 9 August 2025

உணவுகளும் அவற்றின் நன்மைகளும்



உணவுகளும் அவற்றின் நன்மைகளும்


*உடற்சூட்டை தணிப்பவை*

எலுமிச்சை பழம், வெண்பூசணி, 
பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய்,
நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய்,
இளநீர் இவற்றை உண்டால் உடல் சூடு தண்ணியும். 

*பசியின்மை,* 
*ருசியின்மையைப் போக்குபவை*

புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு,
திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி
இவற்றை உண்டால் பசி என்னை ருசியின்மையை போக்கும் 

*ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு*

புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள்,
உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,
பசலைக்கீரை
இவற்றை உண்டால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உண்டாகும் 

*மருந்தைகளை முறிக்கும் உணவுகள்*

அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை,
எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய் இவற்றை உண்டால் நாம் உண்ணுகின்ற மருந்தின் தன்மையை முறித்து விடும். 

*விஷத்தை நீக்கும் உணவுகள்*

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம் இவற்றை உண்டால் நம் உடலில் உணவு மூலம் சேர்கின்ற நச்சுக்களை முறிக்கும். 

*பித்தம் தணிப்பவை*

சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை,
எலுமிச்சை. இவற்றை உண்டால் பித்தத்தை தணிக்கும்.

*கண் நோய்கள் தீர*

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். கண்களுக்கு கீழே கடுக்காயை இழைத்து தடவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு கண் பார்வை நீங்கும். 

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

 நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

சித்தர்கள் நம்மை வழி நடத்தட்டும்

மேலும் தொடர்ந்து பயணிப்போம் 



நன்றி

No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...