Monday, 1 September 2025

02-09-2025 இன்றைய ராசி பலன்கள்

 

 


02-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் 



*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகள் வழியில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் மூலம் மாற்றம் ஏற்படும். சுபகாரிய விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை.


⭐️அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

⭐️பரணி : லாபங்கள் கிடைக்கும். 

⭐️கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இறை சார்ந்த பயணங்கள் சென்று வருவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.


⭐️கிருத்திகை : அனுபவம் வெளிப்படும். 

⭐️ரோகிணி : பயணங்கள் சாதகமாகும்.

⭐️மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

சில அனுபவங்களால் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் மனம் ஈடுபடும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நட்பு மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.


⭐️மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

⭐️திருவாதிரை : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

⭐️புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செயல்படவும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♋ கடகம் - ராசி: 🦀_*

செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவுகள் வகையில் புரிதல்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பகை விலகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.


⭐️புனர்பூசம் : தடைகள் விலகும்.

⭐️பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும். 

⭐️ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♌ சிம்மம் - ராசி: 🦁_*

கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் மனதில் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்த தடுமாற்றம் விலகும். தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.


⭐️மகம் : முன்னேற்றம் உண்டாகும்.

⭐️பூரம் : தடுமாற்றம் விலகும். 

⭐️உத்திரம் : வெற்றிகரமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♍ கன்னி - ராசி: 👩_*

புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். முகத்தில் பொழிவுகள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். வியாபார முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.


⭐️உத்திரம் : பொழிவுகள் மேம்படும்.

⭐️அஸ்தம் : வரவுகள் கிடைக்கும். 

⭐️சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♎ துலாம் - ராசி: ⚖_*

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். புகழ் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.


⭐️சித்திரை : வாதங்கள் நீங்கும்.

⭐️சுவாதி : விவேகத்துடன் செயல்படவும்.

⭐️விசாகம் : பொறுமை வேண்டும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*

திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிமை சார்ந்த செயல்களில் மனம் லயிக்கும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.


⭐️விசாகம் : ஈடுபாடு ஏற்படும்.

⭐️அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐️கேட்டை : முயற்சிகள் கைகூடும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♐ தனுசு - ராசி:  🏹_*

பயணம் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விவசாய பணிகளில் அனுபவம் மேம்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.


⭐️மூலம் : மாற்றமான நாள்.

⭐️பூராடம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். 

⭐️உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♑ மகரம் - ராசி: 🦌_*

மனதளவில் வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.


⭐️உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும். 

⭐️திருவோணம் : ஒத்துழைப்பான நாள்.

⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♒  கும்பம் - ராசி: 🍯_*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். தீர்த்த யாத்திரை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக தொடர்பான உதவிகள் மேம்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். வழக்கு சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.


⭐️அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம்

⭐️சதயம் : உதவிகள் மேம்படும்.

⭐️பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♓ மீனம் - ராசி:  🐟_*

சிறு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான கற்பனை சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். கலை துறைகளில் சில புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.


⭐️பூரட்டாதி :  கவனத்துடன் செயல்படவும். 

⭐️உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும். 

⭐️ரேவதி : அலைச்சல் அதிகரிக்கும். 

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...