Wednesday, 20 August 2025

பணியில் சேர்ந்த 4 மாதங்களில், ₹6,000 இலஞ்சம் பெற்று கைதான VAO

 

 பணியில் சேர்ந்த 4 மாதங்களில்,  ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO 


TNPSC Group IV மூலம் பணியில் சேர்ந்த 4 மாதங்களில், பட்டாவில் பெயர் மாற்றம் தொடர்பான சேவையை பெற ₹6,000 கையூட்டு பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் (இருக்கையில் அமர்ந்திருப்பவர்) கைது.


பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.6,000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாக்கூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்த தேர்விஜயன், தரசூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரும், உதவியாளர் ரமேஷும் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தேர்விஜயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேர் விஜயன் (வயது 50). இவருக்கும், இவரது அண்ணன் அருள்பிரகாசத்திற்கும், மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவர் தானமாக தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்தை வழங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தேர் விஜயன், விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் பட்டா மாற்றம் தொடர்பாக வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் (28), பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு, அங்கிருந்த கிராம உதவியாளர் ரமேஷ் (49), தேர்விஜயனிடம் கூறினார்.


ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேர் விஜயன், கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை சதிஷ்குமாரிடம் கொடுப்பதற்காக தேர் விஜயன் நேற்று வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சதிஷ்குமார், லஞ்ச பணம் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பணியில் சேர்ந்து 4 மாதங்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...