Wednesday, 27 August 2025

28-08-2025 இன்றைய ராசி பலன்கள்

 

 


28-08-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் 



*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். மனதளவில் புதிய உற்சாகம் பிறக்கும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.


⭐️அஸ்வினி : அறிமுகம் ஏற்படும்.

⭐️பரணி : திருப்பங்கள் உண்டாகும். 

⭐️கிருத்திகை : புரிதல் ஏற்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கால்நடை வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் லாபங்கள் மேம்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நன்மை நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

⭐️ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.

⭐️மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விளையாட்டுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு படுத்துவது தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பூர்வீகம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். அமைதி மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐️மிருகசீரிஷம் : புரிதல்கள் ஏற்படும். 

⭐️திருவாதிரை : ஆர்வம் ஏற்படும். 

⭐️புனர்பூசம் : முடிவுகள் பிறக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♋ கடகம் - ராசி: 🦀_*

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெரியோர்களிடத்தில் அனுசாரித்து நடந்து கொள்ளவும். வாகனம் மாற்ற விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். 


⭐️புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.

⭐️பூசம் : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். 

⭐️ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♌ சிம்மம் - ராசி: 🦁_*

மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். முயற்சிக்கு ஏற்ப சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.


⭐️மகம் : தன்னம்பிக்கை பிறக்கும். 

⭐️பூரம் : தடைகள் குறையும். 

⭐️உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♍ கன்னி - ராசி: 👩_*

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கவலை விலகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.


⭐️உத்திரம் : அமைதியான நாள்.

⭐️அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

⭐️சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♎ துலாம் - ராசி: ⚖_*

சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வியாபார ரகசியங்களில் பொறுமை காக்கவும்.முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போது மிதவேகம் நன்மையை தரும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வரவு நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.


⭐️சித்திரை : குழப்பமான நாள்.

⭐️சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 

⭐️விசாகம் : அனுசரித்து செல்லவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்கள் அறிமுகங்கள் மூலம் சில மாற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில தகவல்கள் கிடைக்கும். வருங்கால தேவைகள் குறித்த எண்ணம் மேம்படும். தாமதம் விலகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.


⭐️விசாகம் : வாதங்களை தவிர்க்கவும்.

⭐️அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

⭐️கேட்டை : எண்ணம் மேம்படும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♐ தனுசு - ராசி:  🏹_*

வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகைகளில் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.


⭐️மூலம் : ஆதாயம் உண்டாகும்.

⭐️பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

⭐️உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♑ மகரம் - ராசி: 🦌_*

மருமகன் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சமூக வலைத்தள கருத்துகளில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.


⭐️உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 

⭐️திருவோணம் : கவனத்துடன் செயல்படவும்.

⭐️அவிட்டம் : துரிதம் ஏற்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♒  கும்பம் - ராசி: 🍯_*

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் முயற்சிக்கான பொறுப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐️அவிட்டம் : புரிதல் ஏற்படும்.

⭐️சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

⭐️பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♓ மீனம் - ராசி:  🐟_*

எதிலும் அவசரமின்றி சிந்தித்து செயல்படவும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். ஆக்கப்பூரவமான நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.


⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

⭐️உத்திரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.

⭐️ரேவதி : அனுபவம் ஏற்படும். 

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...