Thursday, 21 August 2025

22-08-2025 இன்றைய ராசி பலன்கள்

 

 


22-08-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் 



*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும்.  கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். மனை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️அஸ்வினி : அனுபவம் வெளிப்படும்.

⭐️பரணி : அனுசரித்து செல்லவும். 

⭐️கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*

சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.


⭐️கிருத்திகை : குழப்பங்கள் விலகும்.

⭐️ரோகிணி : பயணங்களில் கவனம்

⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு துறைகளில் இருந்த மந்த நிலை மாறும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். 


⭐️மிருகசீரிஷம் : செல்வாக்கு உயரும். 

⭐️திருவாதிரை : மதிப்புகள் கிடைக்கும். 

⭐️புனர்பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♋ கடகம் - ராசி: 🦀_*

மனதளவில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களால் மாறுபட்ட தருணங்கள் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அன்பு நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.


⭐️புனர்பூசம் : சஞ்சலமான நாள்.

⭐️பூசம் : பேச்சுக்களில் கவனம்.

⭐️ஆயில்யம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♌ சிம்மம் - ராசி: 🦁_*

கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். சகோதரர்களிடம் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். ஜாமின் விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த பணிகளில் சில தடைகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உயர்வு மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.


⭐️மகம் : அனுசரித்து செல்லவும். 

⭐️பூரம் : வேறுபாடுகள் மறையும். 

⭐️உத்திரம் : சேமிப்புகள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♍ கன்னி - ராசி: 👩_*

உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த சில காரியம் தானாகவே நடக்கும். வியாபார பணிகளில் செழிப்பான சூழல் உண்டாகும். கல்வியில் இருந்த மந்த தன்மை விலகும். சாந்தம் மறையும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.


⭐️உத்திரம் : ஆதாயம் கிடைக்கும். 

⭐️அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும்.

⭐️சித்திரை : மந்தத்தன்மை விலகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♎ துலாம் - ராசி: ⚖_*

தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். செயல்களில் அணுகுமுறைகளால் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். வரவு நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐️சித்திரை : ஆசைகள் நிறைவேறும். 

⭐️சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

⭐️விசாகம் : மாற்றம் பிறக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*

பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பொறுமை காக்கவும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். காப்பகப் பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.


⭐️விசாகம் : பொறுமை காக்கவும்.

⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

⭐️கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♐ தனுசு - ராசி:  🏹_*

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். கருத்துக்கள் வெளிப்படுத்துவதில் சூழநிலை அறிந்து செயல்படவும். உத்யோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செலவும். அமைதி வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.


⭐️மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐️பூராடம் : அலைச்சல் மேம்படும்.

⭐️உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♑ மகரம் - ராசி: 🦌_*

துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.


⭐️உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.

⭐️திருவோணம் : அனுகூலம் ஏற்படும்.

⭐️அவிட்டம் : ஆதரவான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♒  கும்பம் - ராசி: 🍯_*

சாதுரியமான செயல்பாடுகள் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். அரசு விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் குறையும். புகழ் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐️அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.

⭐️சதயம் : ஆதாயமான நாள்.

⭐️பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♓ மீனம் - ராசி:  🐟_*

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கமான செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்கள் சாதகமாக அமையும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆதரவு கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : கரு நீல நிறம்.


⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

⭐️உத்திரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.

⭐️ரேவதி : அனுசரித்து செல்லவும். 

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...