21-08-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாகன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். அலுவலகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
⭐️பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.
⭐️கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.
⭐️ரோகிணி : தேடல்கள் உருவாகும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
குடும்பத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதம் மறையும். உடல் தோற்ற பொழிவுகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். அலுவலக பணிகளை மதிப்புகள் உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பகை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐️திருவாதிரை : பொழிவுகள் மேம்படும்.
⭐️புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்யோகத்தில் சில மாற்றமான சூழல் அமையும். விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் சில புதிய அனுபவம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.
⭐️பூசம் : குழப்பம் நீங்கும்.
⭐️ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
உடன்பிறந்தவர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️மகம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️உத்திரம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் உதவிகள் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வாழ்க்கை துணையினால் மகிழ்ச்சியான சூழல் அமையும். சகோதரர்கள் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்கள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : கவலைகள் குறையும்.
⭐️அஸ்தம் : அறிமுகங்கள் ஏற்படும்.
⭐️சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மருத்துவ தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : புதுமையான நாள்.
⭐️விசாகம் : மாற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களை நம்பி இருக்காமல் இருப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகள் கையிருப்புகள் குறையும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மூலம் : கவனம் வேண்டும்.
⭐️பூராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். விவசாய பணிகளில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
⭐️திருவோணம் : நன்மையான நாள்.
⭐️அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
கனிவான பேச்சுகளால் காரிய அணுகுலம் உண்டாகும். வழக்கு பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நன்மையை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அவிட்டம் : அணுகுலம் உண்டாகும்.
⭐️சதயம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
⭐️பூரட்டாதி : நன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பணிகளில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் தொடர்புகள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். முயற்சி மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.
⭐️ரேவதி : பொறுமை வேண்டும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
No comments:
Post a Comment