இன்றைய (06-08-2025) ராசி பலன்கள் , நட்சத்திர பலன்கள்
மேஷம்
ஆகஸ்ட் 6, 2025
மருத்துவ துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புது விதமான இலக்குகள் பிறக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : மதிப்புகள் மேம்படும்.
பரணி : இலக்குகள் பிறக்கும்.
கிருத்திகை : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மனதளவில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். அலுவலகத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கிருத்திகை : தாமதம் உண்டாகும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : விமர்சனங்கள் நீங்கும்.
---------------------------------------
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அறிமுகங்கள் உண்டாகும்.
திருவாதிரை : புரிதல்கள் மேம்படும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். கலை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : இழுபறிகள் குறையும்.
பூசம் : வரவுகள் உண்டாகும்.
ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தீர்க்கமான முடிவுகள் பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மகம் : ஆர்வம் ஏற்படும்.
பூரம் : வெற்றிகரமான நாள்.
உத்திரம் : முடிவுகள் பிறக்கும்.
---------------------------------------
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : ஆதாயம் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
புதிய முயற்சிகளில் உள்ள நுணுக்கங்களை அறிவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். பாசம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சுவாதி : ஈடுபாடு அதிகரிக்கும்.
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
உடலில் இருந்த சோர்வு, களைப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மனதிற்கு இனிய செய்திகள் கிடைக்கும். வருவாயில் இருத்த ஏற்ற இறக்கம் குறையும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஏற்ற இறக்கமான நாள்.
கேட்டை : இழுபறிகள் மறையும்.
---------------------------------------
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
உடலில் இருந்த சோர்வு, களைப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : குழப்பம் விலகும்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். மனதிற்கு இதமான சில செய்திகள் கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் விற்பனையை மேம்படுத்துவீர்கள். உழைப்புக்கு உண்டான உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : வேறுபாடுகள் விலகும்.
திருவோணம் : தெளிவுகள் ஏற்படும்.
அவிட்டம் : தாமதமான நாள்.
---------------------------------------
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் மன சஞ்சலம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக வியாபாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : சஞ்சலம் ஏற்படும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
ஆகஸ்ட் 6, 2025
இறைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். காரியங்களில் இருந்த தடைகள் விலகும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சில உதவிகள் சாதகமாக அமையும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : தடைகள் விலகும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.
---------------------------------------
No comments:
Post a Comment